புலந்த்சஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் போது, தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்து விட்டார். இதனால், மிகுந்த மனவேதனையடைந்த பவன்குமார். விரக்தியில் தனது ஆள்காட்டி விரலையே துண்டித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பவன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் குமார் இதுதொடர்பாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
0 Comments