பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை கோவை எஸ்.பி பாண்டியராஜன் வெளியிட்டார், அதனால் போலீஸ் சூப்பிரண்டு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட காரணத்தால் கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கோவை மாவட்ட புதிய எஸ்.பி ஆக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புகார் கூறிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்த நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 Comments