Tamil Sanjikai

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அத்துடன் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி பதவி வகித்து வருகிறார் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி என்ற தமிழ்படத்தில் அறிமுகமாகி தென்னிந்தியாவிலுள்ள எல்லாமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் பிறந்தநாளை தனது நகரி தொகுதியில் கொண்டாடினார். அப்போது அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடமாடும் உணவகத்தை துவக்கி வைத்தார். ஒய் எஸ் அண்ணா என பெயர் சூட்டப்பட்ட உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து எம் எல் ஏ ரோஜா செய்தியாளரிகளிடம், கூறியதாவது:

"மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து இடங்களிலும் இத்தகைய நடமாடும் உணவகம் மூலம் தரமான உணவுகள் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் தன்னை சுலபமாக அணுக வசதியாக ”நம்ம எம் எல் ஏ” என்னும் மொபைல் ஆப் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்

4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் நடமாடும் ஓய்.எஸ். உணவகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment