Tamil Sanjikai

டிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளில் இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச இணைதளங்கள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் அதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்

பள்ளி சீருடையுடன் டிக் டாக் மியூசிக்கலி ஆப்பில் தங்களது கலைத்திறமையை காட்டுவதாக எண்ணி தாங்களாக வலியச்சென்று, ஆபாச இணையதளங்களின் வீடியோக்களாக சிக்கிக் கொள்கிறார்கள் பள்ளி மாணவிகள் பலர்!

இன்னும் சில மாணவிகளோ தங்களை சினிமா கதாநாயகிகளாக பாவித்துக்கொண்டு மாணவர்களுடன் டூயட் ஆடி எல்லைமீறுகிறார்கள், இன்னும் சிலரோ தங்கள் காதலனை முத்தம் கொடுக்க அனுமதித்து பதிவு செய்துள்ள வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்

இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் ஆசிரியை நடுவில் அமர்ந்து இருக்க இரு மாணவிகள் அவருடன் டிக்டாக் மியூசிக்கலி ஆப்பில் திறமையை காட்டுகின்றனர்.

இரட்டை அர்த்த பாடல்களையும், சினிமாவில் உள்ள குத்து பாடல்களையும் தங்கள் மனதில் நிறுத்தி நடிப்புத்திறமையை வெளிக்காட்டி உள்ள இந்த மாணவிகளின் பல்வேறு முகபாவங்கள் ஆபாச இணையதளங்களில் தவறான பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறைக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்து இது போன்ற வீடியோக்களை பதிவிடும் மாணவிகளும், பெண்களும் அதனை முற்றிலும் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Comments

Write A Comment