Tamil Sanjikai

சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அந்நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

மேலும் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 5 நாள் அரசுமுறை பயணமாக வரும் 20–ந் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது முதல் முறையாக அவர் டிரம்பை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு 22–ந் தேதி நடைபெறும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாட்டு உறவை புதுப்பிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

0 Comments

Write A Comment