நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ‘பக்ரீத்’. இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதியில் கொண்டாடப்படுவதையே பக்ரீத் என்கிறோம். இதனை தமிழில் தியாகத் திருநாள் என்றும், அரபியில் ஈத் அல்-அதா என்றும் அழைக்கின்றனர்.
இந்நிலையில், இன்று நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
0 Comments