Tamil Sanjikai

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், கடனில் மூழ்கியுள்ள நிலையில் தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன்(நேற்று இரவுடன்) தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமான சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்காக வங்கிகளிடம் அவசர காலக் கடனுதவியாக ரூ. 400 கோடி கேட்டிருந்தது. கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மும்பையிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என தெரிவித்துள்ளது . ஏற்கனவே 5 விமானங்களை மட்டுமே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், இயக்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment