தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 14பேர் உயிரிழந்தனர். 34பேர் காயமடைந்தனர். பொலிவியத் தலைநகர் லா பாஸ் அருகே மலைப்பகுதி வழியாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக, ஈரத்தில் நனைந்திருந்த நெடுஞ்சாலையும் அதையொட்டிய மண்பரப்பும் இளகி அடிப்பரப்பை நோக்கிச் சரிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
நிலச்சரிவில் சிக்கி 14பேர் உயிரிழந்தனர். 34பேர் காயமடைந்தனர். காணாமல் போன ஏழு பேரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
0 Comments