Tamil Sanjikai

நேபாளம் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

பருவமழை காரணமாக நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

சுமார் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போன 30 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment