தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பிகள் வழங்க தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹிட் -க்கும் மேலாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் திருநெல்வேலி மாநகரத்தில் 103 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது
இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்ற நேரங்களில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் சுமார் 100 பேருக்கு சோலார் தொப்பிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்து காவலர்களுக்கு இந்தத் தொப்பியை வழங்கி உள்ளார்.
குளிர்ந்த காற்று செல்லும் வகையில் காட்டன் நூல் மற்றும் தென்னை நார் போன்றவற்றால் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் இந்தத் தொப்பியை அணிவதால் தலையில் சூடு தாக்காமல் உடல் ஓரளவு இயல்பாக இருப்பதற்கு இந்த தொப்பிகள் வழிவகை செய்கின்றன.
0 Comments