கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர். எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன. இலவச மாணவர் சேர்க்கைக்கு www.rte.tnschools.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
0 Comments