மராட்டிய மாநிலம் லதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் உங்களின் நம்பிக்கையை பெற்றதுதான் எனது மிகப்பெரும் சாதனையாகும். காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பாகிஸ்தானும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நக்சல், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலில் இருந்து நம் நாட்டை விடுவிப்பதுதான், எங்களின் முக்கிய நோக்கமாகும்.
பயங்கரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வதுதான் இந்தியாவின் புதிய கொள்கையாகும். பாகிஸ்தான் உருவாக காங்கிரசே காரணம். சுதந்திரத்துக்கு முன்பு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு இருக்காது.
காங்கிரஸ் கட்சியும் அவர்களின் நண்பர்களும் தேச நலனுக்கு எதிரான சிந்தனையுடன் உள்ளனர். நமது பாதுகாப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருப்பது வெட்கப்படவேண்டியது. பயங்கரவாதத்தின் கொடூரத்தை அழிப்பதில் நாங்கள் உறுதியோடு உள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments