Tamil Sanjikai

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் "தலைவி" படத்தில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க,பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கும் இந்தப் படத்தை விப்ரி மீடியா எனும் நிறுவனம், பிரமாண்ட பொருட்செலவில் பன்மொழித் திரைப்படமாக தயாரிக்கவுள்ளது.

நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி படம் எடுக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment