Tamil Sanjikai

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், இன்னும், ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேரவையில் இன்று அறிவித்துள்ளார். மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், சென்னையில் 80, கோவை மற்றும் மதுரையில் தலா 10 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளால், அரசு பேருந்துகளின் விபத்துகள் ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருவதாகவும், விபத்துகள் இன்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்க விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment