Tamil Sanjikai

அமெரிக்க நாட்டின் மஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிப்பதே பெருமையாக உலகில் கருதிவரும் நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவியான 20வயது ஸ்ருதி பழனியப்பன் 41.5 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இதே அணியைச் சேர்ந்த ஜூலியா ஹுயேஸா துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவி ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர் கடந்த 1992-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்தெடுக்கப்பட்டதை அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

0 Comments

Write A Comment