குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் இணைந்து கூட்டாக சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஈரான் நாட்டு படகு ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது படகில் 100 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனிடையே, படகின் ஓட்டுநர் படகுக்கு தீ வைத்து விட்டு போதை பொருட்களை அழிக்க முயன்றுள்ளார். இந்த படகு பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. படகில் இருந்த 9 ஈரானியர்களும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் ஹமீது மலேக் என்பவர் இந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0 Comments