Tamil Sanjikai

ஆஸ்திரேலியாவில் வீசிய புழுதிப்புயல் காரணமாக, நாட்டின் தென் கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள புழுதி புயல் காரணமாக அங்கிருந்து சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 500 கிமீ நீளமும், 1000 கிமீ. அகலமும் கொண்ட இந்த புயல் சிட்னி, வேல்ஸ், நியூ வேல்ஸ் ஆகிய பகுதிகளை தாக்கியுள்ளது. மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பெர்ன் ஆகிய பகுதிகளும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் சாலைகள் கண்களுக்கு தெரியாத வகையில், செந்நிறமாக காணப்பட்டது. மேலும் இந்த புயலின் வேகம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. புயலின் வேகமானது இயல்பாக புயலை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியாவில் பெரிய கட்டிடங்கள் கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புழுதிப்புயல் வீசிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் கடுமையாக தாக்க வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை மற்றும் சுவாச பிரச்சனை உடைய முதியவர்களையும் வெளியே அனுப்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்பட்ட மிகப்பெரிய புழுதிப்புயல் தான் வரலாற்றில் பெரிய புழுதிப்புயலாக இருந்தது . இந்நிலையில், தற்போது மீண்டும் வலிமை கொண்ட புழுதிப்புயல் உருவாகி உள்ளதால் ஆஸ்திரேலிய மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் முதல், ஆஸ்திரேலிய கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்தும் கடுமையாக பாதித்துள்ளது.

0 Comments

Write A Comment