Tamil Sanjikai

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்.

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

Write A Comment