பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ். இவருக்கும், மியான் பைசல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அந்த பெண் மொட்டையடிக்கப்பட்ட தலையுடனும், களையிழந்த முகத்துடனும் பரிதாபமாக பேசியுள்ளார். அதில், அவருடைய கணவர் மற்றும் அவரது நண்பர்களின் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததற்காக தன்னை கணவர் துன்புறுத்தியதாக வீடியோவில் ஆஸிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் என்னுடைய ஆடைகளை வீட்டு பணியாளர் முன் அகற்றி, அவரைக் கொண்டு என்னை பிடிக்கவைத்து தலை முடியை ஷேவ் செய்து பின்னர் அதை தீயிட்டு கொழுத்தியதாக கணவர் மீது ஆஸிஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை என்று அவர் கூறியது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆஸிஸின் கணவர் மற்றும் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டை பைசல் முழுமையாக மறுத்துள்ளார். பொய்யான சூழலை உருவாக்கி அதனை பயன்படுத்தி தன்னை சிக்க வைத்துள்ளதாக பைசல் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments