Tamil Sanjikai

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக வை சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரைக்கு காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மக்களவைத்தேர்தலுடன் சேர்ந்து வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவும் அமமுகவும் கூட்டு சேர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி உள்பட சில அதிமுக தலைவர்கள் மற்றும் பாஜகவினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்செல்வன் ,திமுகவுடன் சேர்ந்து ஆளும் அதிமுக ஆட்சியை கலைப்போம். இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். அப்போது திமுக ஆட்சியை கலைக்க எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.

அதிமுக ஆட்சியை கலைக்க திமுக ஆதரவு அளிக்கவில்லை என்றால் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டார்கள் என்று அர்த்தம். திமுகவால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியாது.

23 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தங்க தமிழ்செல்வன் கூறினார்.

0 Comments

Write A Comment