இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரெக்சிட் விவகாரத்தில், தனது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே தனக்கு எதிராக செயல்படுவதால் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக ஒப்புதல் பெற முடியாததால் தெரசா இந்த முடிவை எடுத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வி அடைந்ததால் தெரசா மே இந்த முடிவை எடுத்துள்ளார்.
வருகிற ஜீன் மாதம் 7 ம்தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் வரை தெரசா மே பிரதமர் பதவியை தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments