Tamil Sanjikai

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருவாரூரில் வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தலை ஒத்தி வைக்க கோரி திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தன. இதையடுத்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்துக்கட்சிகளின் கருத்துகளை அறிக்கையாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைத்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று , திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதியில் மேற்கொண்டு வந்த தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment