Tamil Sanjikai

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணையப் போவதாக கூறினார்.

இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.

வங்கிகள் முன்பாக வங்கி ஊழியர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment