Tamil Sanjikai

பாகிஸ்தானில் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டுவதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இதில் 7 விமானிகளின் கல்விச் சான்றிதழ் போலியானவை என்றும், 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment