உத்தரகாண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த தம்பதியினர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கள் அறையில் இருந்த மின் விசிறியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி விசாரிக்க வரவேற்பாளரை தொடர்புகொண்டபோது யாரும் பதில் சொல்லவில்லை.
இதுகுறித்து அந்த தம்பதியினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஓட்டல் உரிமையாளரை கைது செய்து மின் விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
0 Comments