Tamil Sanjikai

ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த சேவைக்கான மாத கட்டணம் 4.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் இடம்பெற்றிருக்கிறது.

0 Comments

Write A Comment