ஹரியானாவில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த, போலந்து நாட்டை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம், குருகிராமில், போலந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்தார். அவரை தடுத்து நிறுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரின் கைப் பையை சாேதித்தனர். அதில், 4 கிலோ எடையுடைய, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தன.
இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் யார் என விசாரித்தனர். அப்போது, அந்த நபர், போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி என்பது தெரிய வந்தது. அவரிடம் இவ்வளவு போதைப் பொருள் எப்படி கிடைத்தது? யார் கொடுத்து அனுப்பினர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
0 Comments