ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டன. அதனை அடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது. தனியார் ஆய்வக உதவியுடன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தெரிந்த பின்னர் தான் குழந்தைகள் மரணம் பற்றி தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தைகளின் மர்ம மரணத்திற்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
1 Comments
தமிழ் நடை அசாத்தியம் ஆசானே.. இந்த நடையில் பல்லவியும் சரணமும் சுருதியும் ஏழு கட்டையிலேறி ஏதுவாய் அமரும் வல்லமை கொண்டது. இதை அப்படியே ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்தோமெனில் இன்னிசை ராமொன்று மேகி கிண்டிடும் நேரத்தை காட்டிலும் பாஸ்போர்ட் போட்டோ எடுக்கும் நேரத்தை காட்டிலும் குறைவான நேரத்தில் ராகமொன்று தயாராகிடும். ஆசானே உங்களிடமிருந்து நிறைய படிக்க அவாப்படுகிறான் இச்சிறுவன். -சிறுவன் அகிலன்.