பிரெக்ஸிட் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மூன்று தோல்விகளை வழங்கியது.
போரிஸ் ஜான்சனின் உடனடித் தேர்தலுக்கான அழைப்புகளை எம்.பி.க்களால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.. மொத்தத்தில், 293 எம்.பி.க்கள் ஆரம்பகால வாக்கெடுப்புக்கு பிரதமரின் தீர்மானத்திற்கு வாக்களித்தனர், இது தேவையான எண்ணிக்கையை விட மிகக் குறைவு ஆகும்.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அக்டோபர் மாத வாக்கெடுப்பை ஆதரிக்க மாட்டோம் என்று உறுதிப்படுத்தி இருந்தனர், ஒப்பந்தம் இல்லாத பிரெக்சிட்டைத் தடுக்கும் சட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அக்டோபர் 14 ஆம் தேதி வரை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. ஜான்சன் தனது அடுத்த நகர்வைத் திட்டமிடுவதற்கு அவருக்கு எதிரான எம்.பி.க்களிடம் இருந்து அவகாசம் அளிக்கிறது.
காமன்ஸ் சபாநாயகர் ஜான் பெர்கோவ் பாராளுமன்றத்தின் இடைநீக்கத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "இது ஒரு சாதாரண தடை அல்ல" என கூறினார்.
செப்டம்பர் 3ம் தேதி பாராளுமன்றம் கூடியதில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தலைவலி ஏற்பட்டது. 21 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள கன்சர்வேடிவ் குழுவிலிருந்து எதிர்க்கட்சிக்கு ஆதரவாக வெளியேறினர். இதனல் அவர்களை போரிஸ் ஜான்சன் நீக்கினார். பின்னர் மேலும் இரண்டு அமைச்சர்கள், அவரது சகோதரன் ஆகியோர் தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்.
0 Comments