Tamil Sanjikai

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள 23 வயதான இமாம் உல்-ஹக் கடந்த 6 மாதங்களில் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இளம் பெண் ஒருவர் இமாம் உல்-ஹக்குடன் ‘தமக்கு உண்டான வாட்ஸ்-அப்’ உ ரையாடல் மற்றும் ஆதாரங்களை சமுக வலைதளமான டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பெண், ‘நாங்கள் அறிந்தவரை இமாம் உல்-ஹக் 7-8 பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்து அவர்களை ஏமாற்றி உள்ளார். ஒவ்வொருவரிடமும் தனக்கு வேறு எந்த பெண் தோழியும் கிடையாது என்று சொல்லியே ஊர் சுற்றியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து இமாம் உல்-ஹக் இதுவரை வாய் திறக்கவில்லை. இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment