தமது வேண்டுகோளை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தனது உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஹரியாணா மாநிலம், ஜாஜர் மாவட்டத்துக்குட்பட்ட மண்டல் பகுதியின் பாஜக நிர்வாகியாக இருப்பவர் தர்மேந்திர சிலானி. இவர், அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமது உறவினர்களான ராஜா சிங் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அவர்கள், தங்களின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தாக தெரிகிறது. இதுகுறித்து சிலானி கேட்டதற்கு, "ஆமாம்...நாங்கள் காங்கிரஸுக்கு தான் வாக்களித்தோம்" என ராஜா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிலானி, தன்னிடமிருந்த உரிமம் இல்லாத துப்பாக்கியால், ராஜா சிங்கத்தின் கால் மற்றும் வயிற்றில் மூன்று முறை சுட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சண்டீகர் போலீஸார், தலைமறைவாகியுள்ள தர்மேந்தர் சிலானியை தேடி வருகின்றனர்.
0 Comments