Tamil Sanjikai

மஹாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக நம்பப்பட்டது. யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீதியை கிளப்பிய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைன் மூலமாக கோரிக்கைகள் அனுப்பட்டன.

அதையடுத்து, அவ்னி புலியைக் கண்டதும் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. அவ்னி புலியை கண்டுபிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதி நவீன கேமராக்கள், சென்சார் கருவிகள் போன்றவற்றைக் கொண்டும் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் யாவாத்மல் பகுதியில் நேற்று இரவு அவ்னி புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

அவ்னி புலி 10 மாதங்கள் ஆன தனது இரண்டு குட்டிகளுடன் வலம் வந்தது. அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அவ்னி புலியால் கடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரில் 5 பேரை அவ்னி புலியே அடித்துக்கொன்றதை டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன..

0 Comments

Write A Comment