தமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் திருச்சியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி முதன்முறையாக வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று நடைபெற்றது.
இந்த கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் மகாலில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கண்காட்சியின் முதல்நாளில் ஆஸ்டின், வோல்ஸ்வேகன், கௌலி, இத்தாலியன் பியட், சவர்லட், மோரீஸ், அம்பாசிடர் கார், ஸ்டான்டர்ட் மற்றும் வில்லீஸ் ஜீப் என 20 நான்கு சக்கர வாகனங்கள் திருச்சியில் மத்திய பேருந்துநிலைய சாலையில் அணிவகுத்து சென்றன.
இந்த பழங்கால பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தன.
0 Comments