Tamil Sanjikai

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 47மாடிக் கட்டடத்தில், வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச்சென்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலந்தி மனிதர் அலைன் ராபர்ட் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலைன் ராபர்ட் தனது 11வயதில் இருந்தே உயரமான கட்டடங்களில் வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச் செல்வதைப் பொழுதுபோக்காச் கொண்டிருந்தார்.

இவ்வாறு 1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் என்னும் கட்டடத்தில் ஏறிச் சாதனை படைத்தபோது அவருக்கு பிரெஞ்ச் சிலந்தி மனிதன் என்னும் பட்டப் பெயர் வழங்கப்பட்டது.ஈபில் கோபுரம், சிட்னி ஓபரா, துபாயின் புர்ஜ் கலீபா உட்பட உலகம் முழுவதும் 150க்கு மேற்பட்ட கட்டடங்களில் ஏறி அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

பிலிப்பைன்சின் மணிலாவில் 47மாடிக் கட்டடத்தில் வெளிப்புறச் சுவர் வழியாக உச்சிக்கு ஏறிச் சென்று சாதனைபடைத்த அவரைக் காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர்.

0 Comments

Write A Comment