Tamil Sanjikai

இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘கென்னெசெட்’((knesset))என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, நேதன்யாகு மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

37 சீட்களை மட்டுமே நேதன்யாகு பெற்றிருந்ததாலும் பெரும்பான்மையை நிலைநாட்ட அக்கட்சி வலுதுசாரி அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment