பாகிஸ்தான் நாட்டில் நீதிபதியாக பதவியேற்க உள்ள முதல் இந்துப் பெண் என்ற அந்தஸ்தை சுமன் குமாரி பெற்றுள்ளார்.
எல்.எல்.பி படிப்பையும், கராச்சியில் உள்ள ஸாபிஸ்ட் ((Szabist)) பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை சுமன் குமாரி படித்தார். சிந்து மாகாணம், குவாம்பர் ஷாதாத்கோட் ((Qambar shahdadkot)) மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி, அதே மாவட்டத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தானில் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
தனது மகள் ஏழை எளிய மக்களுக்கு உதவுவார் என்று அவரது தந்தை பவன் குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராணா பகவன்தாஸ் தான் அந்நாட்டின் முதல் இந்து நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments