Tamil Sanjikai

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ள நிலையில், அந்நிறுவத்தின் தலைவர் வெளிநாடு தப்பியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, சிவாஜி நகரில் இயங்கி வரும் ஐ.எம்.ஏ என்ற தனியார் நிதி நிறுவனத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்திலிருந்து அரசியல்வாதிகள் சிலர், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர் கான் தெரிவித்திருந்தார்.

இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்தில் சுமார் 1500 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பெங்களூரு போலீசில் சுமார் 23 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதற்கிடையே, முகமது மன்சூர் கான், துபாய் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment