Tamil Sanjikai

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். ரூ.10 கோடியை சுப்ரீம் கோர்ட்டில் செலுத்திய பிறகு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மார்ச் 5,6,7,12ம் தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் 'முன்புபோல் இல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; சட்டத்தோடு விளையாட நினைத்தால் கடவுள் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்!' என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

0 Comments

Write A Comment