மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய பாலிவுட் திரைப்படமான ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.
ஸ்ரீதேவின் வாழ்க்கையில் சில அறியாத பக்கங்களை சித்தரிப்பதைப் போன்ற காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஓட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில் குளியல் தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வகையில் படமாக்கப்பட்ட காட்சியும் இந்த டீசரில் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்திற்கு எதிராக, படத்தின் குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments