Tamil Sanjikai

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகளின் திருமண தேவைக்காக தன்னை 6 மாத காலத்திற்கு பரோல் விடுவிக்குமாறு கேட்டிருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, தனது மகளுக்காக தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் எனவே தனது மக்களின் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று கோரியிருந்தார்

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கி சென்னை கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து, அவர் இன்று பரோலில் வெளியேவர உள்ளதாக தகவல் வெளியானது. காலையில் பரோல் உத்தரவு கிடைத்தவுடன் சுமார் 8:30 மணி அளவில் அவர் சிறையிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

அதன்படி இன்று காலை 9 மணியளவில் அவர் வேலூர் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.சத்துவாச்சேரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில பொதுசெயலாளர் சிங்கராயன் என்பவர் வீட்டில் அவர் தங்குகிறார்

0 Comments

Write A Comment