இயக்குநர் அட்லி இயக்கும் படமொன்றில் நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காசிமேடு அருகே உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் நடைபெற்றது.
விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் நடிகர் விஜயைப் பார்க்க அங்கு வரத் தொடங்கினர். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்தனர்.
0 Comments