Tamil Sanjikai

அக்னிச்சிறகுகள் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்ஷரா ஹாசன் , ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடிக்கும் படம் 'அக்னிச்சிறகுகள்'. அதிரடி ஆக்‌ஷன், சேஸிங் பயணமாக உருவாகும் இந்தப் படத்தின் திரைக்கதை இஸ்தான்புல் பகுதியில் துவங்கி நார்வே மலைப்பகுதிகளில் முடிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் படமாக்கப்பட உள்ளதால் படக்குழு தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தை டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

0 Comments

Write A Comment