அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை, அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அமெரிக்க 25 விழுக்காடு வரையில் வரிகளை உயர்த்தியுள்ளது.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தி கடந்தாண்டு அறிவித்தது.
அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையால், அதனை நடைமுறைப்படுத்துவது, வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தி, வரும் வாரத்திலேயே நடைமுறைப்படுத்த இந்தியா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள், பாதம் பருப்பு, கொண்டை கடலை, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 200 மில்லியன் டாலர் மதிப்பிலான, 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான வரியை உயர்த்தியதற்கும், முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை விலக்கியதற்கும் பதிலடியாகவே, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments