Tamil Sanjikai

தன்னை காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல். பெங்களூருவில் உள்ள ஐ டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் தனது வீட்டின் அருகே வசித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் திருமணம் செய்துகொண்டு தனித் தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தப் பெண் இம்மானுவேல் உடனான காதலை திடீரென முறித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற இமானுவேலுவை பெண்ணின் உறவினர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இமானுவேல் தன்னை காதலித்து ஏமாற்றிய பெண் மீதும் தன்னை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment