பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை நாளை முதல் தொடங்கவிருப்பதாகவும் , ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நாளை முதலும், ஜனவரி 11 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜனவரி 12 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், ஜனவரி 14 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments