Tamil Sanjikai

குஜராத் மாநிலத்தில், வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபரை, விஷப் பாம்பு ஒன்று கடித்தது. இதனால் கோபமடைந்த அந்த நபர் பாம்பை திருப்பி கடித்து அதை கொன்றுவிட்டார். எனினும், விஷம் ஏறியதில் சிகிச்சை பலனின்றி அந்த நபரும் பரிதாபமாக உயிரிழந்தார்..

குஜராத் மாநிலம், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சன்வாலா கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ஒரு விஷப்பாம்பு சென்றது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தோர், பாம்பை பார்த்ததும் பதறி அடித்து ஓடினர்.

ஆனால், முதியவர் மட்டும் தைரியமாக நின்று கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம் தான், பல பாம்புகளை கடித்து கொன்றுள்ளதாக தெரிவித்தார். அவர் பேசிக் கொண்டிருந்த போதே, அந்த பாம்பு, அவரின் காலில் கடித்தது. இதனால் கோபமுற்ற முதியவர், அதை கையில் எடுத்து பாம்பை கடிக்க முயன்றார், அப்போது அந்த பாம்பு மீண்டும் அவரது முகத்தில் ஒரு முறை தீண்டியது.

இதனால் கடும் கோபமடைந்த முதியவர், அந்த பாம்பை கடித்து துப்படினார். அதில், அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. சற்று நேரத்தில் மயக்கமடைந்த முதியவரை, அங்கிருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவியதால், சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

0 Comments

Write A Comment