ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்கள் தினமும் அவரை 30 நிமிடங்கள் வந்து சந்திக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கற்கிழமை, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் தங்களுடன் அழைத்து சென்றனர்.
0 Comments