Tamil Sanjikai

மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தை அனைத்து ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். படத்தின் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ஓரளவு வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில் விஜய், விக்ரம், சிம்பு கூட்டணியில் மணிரத்னம் புதிய படத்தை இயக்க உள்ளதாக ஒரு பேச்சு திரையுலகில் உலவுகிறது. இந்த படமும் தாதாக்கள் பற்றிய கதையாக தளபதி பாணியில் இருக்கும் என்கிறார்கள். இவர்களில் விக்ரமும், சிம்புவும் ஏற்கனவே மணிரத்னம் படங்களில் நடித்துவிட்டார்கள்.

இதுதவிர மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்க இருப்பதாகவும், அதற்கான பணிகளில் இறங்கியிருப்பதாகவும், அதில் தான் இவர்கள் மூன்று பேரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment