Tamil Sanjikai

இந்திய வம்சாவழி பெண்ணான நிம்ரதா ஹேலி(நிக்கி ஹேலி) தனது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

நிக்கி ஹேலி ஐ .நா சபையில் அமெரிக்காவின் 29வது தூதராக 2017 ஆம் வருடம் ஜனவரி 27 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இரண்டு வருடப் பணிக் காலத்துக்கு பிறகு அவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. நிக்கி ஹேலி, பாரக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது சவுத் கரோலினாவின் 116வது கவர்னராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நிக்கியின் ராஜினாமாவை அடுத்து, அப்பதவிக்கான பெயரை ஒரு சில வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment