Tamil Sanjikai

தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், வயது 39, உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூர்யாபேட்டை மாவட்டத்தில் கோடாட்டில் பிறந்த வேணு மாதவ், 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர், சுஸ்வகதம், தோலி பிரேமா மற்றும் தமுடு போன்ற படங்களில் அவரது மறக்கமுடியாத நடிப்பால் பிரபல நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றார்.

ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் சத்ரபதி, ரவி தேஜாவின் கிக், சிரஞ்சீவியுடன் ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ், அந்தரிவாடு, மற்றும் ஜெய் சிரஞ்சீவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் என்னவளே உள்பட ஓரிரு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார், மேலும் கோடாட்டில் இருந்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment